Posted on

Aadi Velli Poojai

Days Hours Minutes Seconds

உலக சுபிட்சத்துக்காக
திருவிளக்கு பூஜை

ஆடி வெள்ளி மாலை 6 மணிக்கு செல்வவளம் தரும்
திருவிளக்கு பூஜை

வேண்டிய பொருள்கள்

  1. குத்துவிளக்கு
  2. தாம்பாளம்
  3. கோலமிட்ட மனை
  4. நல்லெண்ணெய், பசுநெய்
  5. பஞ்சு திரி
  6. பச்சை கற்பூரம்
  7. மஞ்சள், சந்தனம்,
  8. தாழம்பூ குங்குமம்,கற்பூரம், சாம்பிராணி,ஊதுபத்தி
  9. மலர்கள் இவை சிறப்பு…தாமரை,
    தாழம்பூ,மல்லிகை, முல்லை,ஜாதிமல்லி, செண்பகப்பூ, நாட்டுரோஜா.
  10. அட்சதை
  11. பழங்கள், தேன் நெல்லிக்கனி
  12. வெற்றிலை பாக்கு
  13. சர்க்கரை பொங்கல் அல்லது கற்கண்டு பொங்கல்அல்லது, பால் பாயாசம்
  14. ஆரத்தி தட்டு

பாடல்கள்

1. திரு விளக்கு அகவல் – Click to dowload as file

விளக்கே திருவிளக்கே வேந்தன் உடன்பிறப்பே
ஜோதிமணி விளக்கே ஸ்ரீதேவி பொன்மணியே
அந்திவிளக்கே அலங்கார நாயகியே
காந்தி விளக்கே காமாக்ஷி தாயாரே,
பசும்பொன் விளக்கு வைத்துப்பஞ்சு திரி போட்டுக்
குளம்போல எண்ணெய் விட்டுக்
கோலமுடன் ஏற்றி வைத்தேன்!
ஏற்றினேன் நெய்விளக்கு எந்தன் குடி விளங்க
வைத்தேன் திரு விளக்கு மாளிகையும் தான் விளங்க
மாளிகையில் ஜோதி உள்ள மாதாவைக்
கண்டு மகிழ்ந்தேன் யான்!
மாங்கல்ய பிச்சை மடி பிச்சை தாருமம்மா!
சந்தான பிச்சையுடன் தனங்களும் தாருமம்மா!
பெட்டிநிறைய பூஷணங்கள் தாருமம்மா!
கொட்டகை நிறைய குதிரைகளை தாருமம்மா!
புகழுடம்பை தாருமம்மா! பக்கத்தில் நில்லுமம்மா!
அல்லும்பகலும் என்றன் அண்டையிலே நில்லுமம்மா!

சேவித்து எழுந்திருந்தேன், தேவி வடிவங்கண்டேன்
வஜ்ர கிரீடம் கண்டேன், வைடூர்ய மேனி கண்டேன்
முத்துக்கொண்டை கண்டேன் முழுப்பச்சை மாலை கண்டேன்
சௌரி முடி கண்டேன் தாழை மடல் சூடக்கண்டேன்
பின்னல் அழகு கண்டேன் பிறை போல் நெற்றி கண்டேன்
சாந்துடன் நெற்றி கண்டேன் தாயார் வடிவங்கண்டேன்
கமலத் திரு முகத்தில் கஸ்தூரிப் பொட்டு கண்டேன்
மார்பில் பதக்கம் மின்ன மாலையசையக்கண்டேன்
கைவளையல் கலகலென்னக் கணையாழி மின்னக் கண்டேன்
தங்க ஒட்டியாணம் தகதகென்ன ஜொலிக்கக் கண்டேன்
காலிற்சிலம்பு கண்டேன் காலாழி பீலி கண்டேன்
மங்கள நாயகியை மனங்குளிரக் கண்டு
மகிழ்ந்தேன் அடியேன் யான்!

அன்னையே அருந்துணையே அருகிருந்து காருமம்மா!
வந்த வினையகற்றி மஹா பாக்கியம் தாருமம்மா!
தாயாகும் உன்றன் தாளடியில் சரணம் என்றேன்
மாதாவே உன்றன் மலரடியில் நான் பணிந்தேன்!!!

2. பிரம்மதேவன் தேவேந்திரனுக்கு உபதேசித்த மகாலட்சுமி
ஸ்தோத்திரம் – Click to download as file

தாமரையில் வசிப்பவளே உன்னை வணங்குகிறேன் நாராயணியே உன்னை வணங்குகிறேன் பகவான் கிருஷ்ணனுக்கு பிரியமானவளே உன்னை வணங்குகிறேன்தத்வ ஸ்வரூபிணீ பத்மா உன்னை வணங்குகிறேன் தாமரை இதழ் போன்ற கண்களை உடையவளே உன்னை வணங்குகிறேன் தாமரை முகம் படைத்தவளே உன்னை வணங்குகிறேன் தாமரையை இருப்பிடமாக கொண்டவளே உன்னை வணங்குகிறேன்
தாமரை விழிகளை உடையவளே வைஷ்ணவி உன்னை வணங்குகிறேன் சகல சம்பத்து ஸ்வரூபமா னவளே உன்னை வணங்குகிறேன் வேண்டியதெல்லாம் அளிப்பவளே உன்னை வணங்குகிறேன் சுகத்தை அளிப்பவளே உன்னை வணங்குகிறேன் வீடுபேற்றை அளிப்பவளே உன்னை வணங்குகிறேன் சித்தி அளிப்பவளே உன்னை வணங்குகிறேன் பகவானிடம் பக்தி அளிப்பவளே உன்னை வணங்குகிறேன் வாழ்க்கையில் மகிழ்ச்சி அளிப்பவளே உன்னை வணங்குகிறேன் பகவான் கிருஷ்ணனுடைய மார்பில் வசிப்பவளே உன்னை வணங்குகிறேன் பகவான் கிருஷ்ணன் உடைய ஒளி மண்டலமாக விளங்குபவளே உன்னை வணங்குகிறேன் ரத்தின ஆபரணங்களை அணிந்தவளே உன்னை வணங்குகிறேன் செல்வங்களுக்கு இருப்பிடம் ஆனவளே மகாதேவி உன்னை வணங்குகிறேன் புனிதத் தலங்களுக்கு இருப்பிடம் ஆனவளே உன்னை வணங்குகிறேன்
ஸஸ்ய லக்ஷ்மி புத்தி சொரூபமான வழி புத்தி அளிப்பவளே உன்னை வணங்குகிறேன் வைகுந்தத்தில் மகாலஷ்மி ஆகவும் பாற்கடலில் ஸ்வர்க்க லட்சுமியாகவும்
அரசர்களிடம் ராஜலஷ்மி யாகவும் இல்லறத்தார் களிடம் கிரக லட்சுமியாகவும் விளங்குபவளே உன்னை வணங்குகிறேன் சுபக்கிரகங்களின் தேவதையாக விளங்குபவளே உன்னை வணங்குகிறேன் பசுக்களில் காமதேனுவாகவும் யாகங்களில் தட்சணையாகவும் தேவமாதா அதிதியாகவும் தாமரையில் கமலை ஆகவும் விளங்குபவளே உன்னை வணங்குகிறேன்
அவிர்பாகம் அளிக்கும்போது ஸ்வாகா தேவியாகவும் கவ்ய தானம் அளிக்கும்போது ஸ்வதா தேவியாகவும் விளங்குபவளே உன்னை வணங்குகிறேன் விஷ்ணு ரூபமாக விளங்குபவளே உன்னை வணங்குகிறேன் சகல லோகங்களுக்கும் ஆதாரமாக இருப்பவளே உன்னை வணங்குகிறேன் சுத்த கந்த ரூபிணி யாகவும் நாராயணனால் போற்றப்படுபவளாகவும் இம்சை முதலிய தீய குணங்கள் இல்லாதவளே உன்னை வணங்குகிறேன் வரம் அளிப்பவளே சுபமங்கள முகம் உடையவளே உன்னை வணங்குகிறேன்
யாருடைய அருட்கண் பார்வை இல்லாவிட்டால் சகல லோகங்களும் சக்தியில்லாமல் சாம்பலாக போய்விடுமோ யாருடைய கடைக்கண் பார்வை இல்லாவிட்டால் சகல உலகங்களிலும் உயிர் வாழ்க்கை இல்லாமல் போய்விடுமோ அப்படிப்பட்ட தேவியே உன்னை வணங்குகிறேன் தாயே நீயே எல்லாவற்றிலும் உயர்வானவளும் சகல உறவினர்களின் ரூபமாக விளங்குபவளும்
ஆவாய் உன்னருள் இல்லாவிட்டால் அண்ணன் தம்பிகளுக்கு இடையே கூட நல்லுறவு இல்லாமல் போய்விடும் உற்றார் சுற்றம் என்பதெல்லாம் உண்டாவதும் உன்னருளாலே யே
அதனால் அறம் பொருள் இன்பம் வீடு என்ற நால்வகை சாதனங்களுக்கும் காரணமாக நீயே விளங்குகிறாய் குழந்தைக்கு பால் கொடுக்கும் தாயைப் போல நீயே சகல உலகங்களையும் அணைத்துக் காக்கும் தாயாக விளங்குகிறாய் உன்னருள் இல்லாவிட்டால் புல் பூண்டு முதல் ஓர் உயிரும் வாழ முடியாது
அம்பிகையே மலர்ந்த முகமுடைய நீ என்னை அன்புடன் பாராய் என்றும் இளமையுடன் இருப்பவளே பகைவர்களால் கொள்ளப்பட்ட செல்வங்கள் எனக்கு மீண்டும் கிடைக்க அருள்தாராய் ஹரிக்கு பிரியமானவளே உன்னருள் இல்லாமலும் நாங்கள் உற்றார் உறவினர் இல்லாமலும் சொத்து சுகம் இல்லாமலும் பராரி களாக திரிகிறோம் சுரேஸ் வரி எங்களுக்கு சக்தியையும் அரச போகங்களையும் தருவாய் புகழையும் செல்வத்தையும் தருவாய் மக்கள் செல்வத்தை அளிப்பாயாக
எங்களுடைய விருப்பங்களை நிறைவேற்றி வைப்பாயாக நல்லறிவை தருக தர்ம சிந்தனையை தருக சௌ பாக்கியங்களை தருக அதிகாரங்களை தருக புகழையும் அளவற்ற ஆற்றலையும் தருக போரில் வெற்றியும் பெரும் செல்வத்தையும் தருக

பெரும் புண்ணியம் நிறைந்ததான இந்த ஸ்தோத்திரத்தை எவரொருவர் மூன்று சந்தியா காலங்களிலும் பக்தியோடு பாராயணம் செய்கிறாரோ அவர் குபேரனுக்கு சமமான செல்வம் உடையவராக விளங்குவார் தோத்திரத்தை பாடம் செய்து ஜபிப்பவர் கற்பக மரத்தைப் போல மற்றவர் கேட்டதைத் தரும் சக்தி உள்ளவராக விளங்குவார் இதை 5 லட்சம் முறை ஜெபித்தால் தோத்திர சித்தி உண்டாகும் இவ்விதமாக ஒரு மாத காலம் ஜபிப்பவர்க்கு சகல சுகங்களும் ராஜ போகமும் உண்டாகும் என்று பிரம்மா வைவர்த்த புராணத்தில் கூறப்பட்டுள்ளது

3. ஆதி சங்கரர் அருளிய கனகாதார ஸ்தோத்திரம்.. தமிழ் வடிவில் – Click to download as file

மரகதத மாலை மலர் மொட்டுகளை மொய்கின்ற பொன்னிற கருவண்டு போல்!
மாதவன் மார்பினில் வாசம் புரிந்தங்கு மெய்சிலிர்ப்பு ஏற்றும் விழிகள். மரகதத மாலை மலர் மொட்டுகளை மொய்கின்ற பொன்னிற கருவண்டு போல் !
மாதவன் மார்பினில் வாசம் புரிந்தங்கு மெய்சிலிர்ப்பு ஏற்றும் விழிகள். பரவும் பல் வடிவத்தின் செல்வவளம் ஆக்கிடும் திருமகளின் அழகு விழிகள் !
பரிவோடும் அந்த இரு விழிகளின் கடை நோக்கு மங்களம் எனக்கு அருள்கவே.

நீலமா மலரினில் உள் சென்று வெளி வந்து உலவிடும் பெண்வண்டு போல்,
நீலமா முகில் வண்ணன் திருமுகம் காண்கின்ற ஆசையால் மேல் சுளன்று – கோலம் கண்டு
உடன் நாணம் ஏற மீண்டும் கீழ் வந்து மேல் சென்றிடும் குறு நகையால்
அலை மகள் கண் வரிசை என்வாழ்வில் செல்வம் எல்லாம் தருகவே.
கனக மழை பொலிகின்ற காருணிய மேகமே இலக்சுமியே வந்தருள்கவே கனக தாரை என்னும் துதி கேட்டு வாழ்விலே அயிஸ்வரியம் தந்தருள்கவே!

ஆனந்தமாய் சற்று விழிகளை மூடிய முகுந்தனை காணும் விழிகள் ஆனந்தம் தந்தபடி இமை சிறிதும் அசையாமல் இனிமையை வார்க்கும் விழிகள் மன்மத சாயலை தன்னில் ஏற்கும் விழிகள் பள்ளிகொள்ளும் பரமனின் – மனைவியாம் திருமகளின் பாதி மூடும் விழிகள் செல்வ சுகம் யாவும் தருக எந்த கடை பார்வை நாரணனின் கவ்ஸ்துவ மார்பினில் வாழ்கின்றதோ எந்த கடை பார்வை இந்திரனின் நீலமணி சரமாய் ஒளிர்கின்றதோ

எந்த கடை பார்வை சுந்தர திருமாலின் தேவைகளை தருகின்றதோ அந்த கடை பார்வை வீசிடும் கமலமகள் மங்களம் எனக்கு அருள்கவே கனக மழை பொலிகின்ற காருணிய மேகமே இலக்சுமியே வந்தருள்கவே கனக தாரை என்னும் துதி கேட்டு வாழ்விலே அயிஸ்வரியம் தந்தருள்கவே நீருண்ட மேகமாய் காருண்டு காட்சி தரும் விஷ்ணுவின் திருமார்பினில் நிலைகொண்டு ஒளிர்கின்ற மின்னளாகி அகில உலகுக்கும் தாயுமாகி பார்கவ குலத்திற் அவதரித்து

பூஜை செய்வதற் உரியதாகி பரிமளிக்கும் வடிவம் எதுவோ அது என்னில் மங்களம் மழை பொலியட்டுமே மங்கலங்கள் யாயும் தன்னிடத்தில் கொண்ட மாயன் வைகுந்தன் நெஞ்சில் மதுகைடவர்யெனும் வலிமைமிகு அசுரனை மாயத திருமாலின் நெஞ்சில் மன்மதன் சென்று அமர வழிசெய்த அந்த கடல்குமரி திருவின் பார்வை புன்சிரிபேந்திடும் அந்த கடை கண் பார்வை என்னையும் அருளட்டுமே கனக மழை பொலிகின்ற காருணிய மேகமே இலக்சுமியே வந்தருள்கவே கனக தாரை என்னும் துதி கேட்டு வாழ்விலே அயிஸ்வரியம் தந்தருள்கவே

உலகாளும் வாய்ப்பையும் இந்திர பதவியையும் வேடிக்கையாய் கொடுக்கும் முரணை வெற்றிகொண்ட விஷ்ணுவிற்கு பெரும் ஆனந்தம் தந்து நிற்கும் நீலோத் பல மலரினில் உட்புற பகுதிபோல் நளினமாய் தோன்றிநிற்கும் நிலமகளின் கடைநோகில் ஒரு பாதி என்மீது கணமேதும் பொலியட்டுமே மறுமைக்கு தேவையாய் உல்லென செயல்களை செய்கின்ற தகுதி இல்லா மனிதர்கும்கூட எந்த கடை பார்வை சொர்கத்தை தருகின்றதோ

அந்த கருணை பார்வை கொண்டவள் தாமரை மலர்மீது வீற்றிக்கும் அன்னையாம் ஸ்ரீ மகா லக்ஷ்மியின் திருநோக்கு தேவைகளை அருளட்டுமே கனக மழை பொலிகின்ற காருணிய மேகமே இலக்சுமியே வந்தருள்கவே கனக தாரை என்னும் துதி கேட்டு வாழ்விலே அயிஸ்வரியம் தந்தருள்கவே கருனையெனும் அருள் காற்றினை நன்மைதர கூட்டியே வந்துநிற்கும் திருமகளின் விழியெனும் தயைகொன்ட நீருண்ட கரியமா வண்ணமேகம் ஏழ்மையால் துயருற்று வாழ்கின்ற சாதக குஞ்சுகலாம் எங்களுக்கு

செல்வமழை பெய்து பெரும் பாவம் வறுமை நீக்கி வளம்மெல்லாம் அருளட்டுமே கலைமாமகள் என்றும் கருட கொடியானின் அலைமாமகள் என்றுமாய் நிலமாலும் சாகம்பரி என்றும் பிறை சூடும் பெம்மானின் மலைமகளும்மாய் உலகத்திலே நின்று உயிர் படைத்தது காத்து முடிப்பதை விளையாட்டென செய்பவள் மூவுலகம் ஆளும் நாராயணனின் நாயகியே போற்றி போற்றி கனக மழை பொலிகின்ற காருணிய மேகமே இலக்சுமியே வந்தருள்கவே கனக தாரை என்னும் துதி கேட்டு வாழ்விலே அயிஸ்வரியம் தந்தருள்கவே

நல்ல பல செயலுக்கு ஏற்றபடி பயன்தரும் வேத வடிவினளே போற்றி நளினமிகு அழகிய குணங்களின் உறைவிடமே ரதி தேவி போற்றி போற்றி எல்லை இல்லா சக்தி எனவாகி தாமரையில் அமரும் மலர்மகளே போற்றி எங்கும் விளங்கிடும் பூரணமே எளில்புரிச உத்தமனின் துணையே போற்றி செங்கமல மலர் போன்ற சிங்கார முகம் கொண்ட திருமகளே போற்றி போற்றி மந்தரமலை அசையும் பாற்கடல் தோன்றிய மாமகளே போற்றி போற்றி சந்திர தேவனுடன் தேவர் அமுதத்துடன் பிறந்தவளே போற்றி போற்றி!

நந்தகோவிந்தன் நாராயணனின் நாயகியே நிலமகளே போற்றி போற்றி கனக மழை பொலிகின்ற காருணிய மேகமே இலக்சுமியே வந்தருள்கவே கனக தாரை என்னும் துதி கேட்டு வாழ்விலே அயிஸ்வரியம் தந்தருள்கவே தங்கநிற தாமரையை செந்தளிர் கரமேந்தும் செந்திருவே போற்றி போற்றி தரணி மண்டலம் முழுதும் அரசாட்சி செய்கின்ற நாயகியே போற்றி போற்றி தேவாதி தேவர்க்கு ஆதிமுதல் தயை புரியும் செல்வமே போற்றி போற்றி!

சாந்தமென்னும் வில்லை ஏந்திடும் இராமனின் இல்லறமே போற்றி போற்றி பிருகு முனியின் புதல்வியாய் அவதாரம் செய்தவளே தேவியே போற்றி போற்றி திருமாலின் வலமார்பில் நிறைவாக உறைபவளே திருமகளே போற்றி போற்றி கமலமென்னும் மலரினில் ஆலயம் கொண்டவளே இலக்சுமியே போற்றி போற்றி காலடிகள் மூன்றினால் உலகினை அளந்த தாமோதரனின் துணையே போற்றி கனக மழை பொலிகின்ற காருணிய மேகமே இலக்சுமியே வந்தருள்கவே கனக தாரை என்னும் துதி கேட்டு வாழ்விலே அயிஸ்வரியம் தந்தருள்கவே!

ஒளிசுடரும் காந்தியும் தாமரை விழிகளும் கொண்டவளே போற்றி போற்றி உலகம் அனைத்தையும் இயக்கிடும் மங்கல நாயகியே போற்றி போற்றி அமரருடன் அனைவரும் அடிபணிந்தே தொழும் அலைமகளே போற்றி போற்றி நந்தகோபன் குமரன் நந்தகோபாலனின் நாயகியே போற்றி போற்றி செல்வங்கள் தருபவளே ஐம்புலனும் ஆனந்தம் பெற்றிடும் தாயே பல்வகை பதவிகள் அறியாசனகளை தருகின்ற கமலனயணி அழல் வினைகளை போக்குபவளே எங்கள் அன்ஞானம் நீக்குபலே செல்வியே தொழுகிறேன் உன்னையே அன்னையே என்னையே என்றும் காப்பாய்!

கனக மழை பொலிகின்ற காருணிய மேகமே இலக்சுமியே வந்தருள்கவே கனக தாரை என்னும் துதி கேட்டு வாழ்விலே அயிஸ்வரியம் தந்தருள்கவே தொழுகின்ற அடியார்க்கு பொழுதெல்லாம் துணை நின்று செல்வங்கள் யாவற்றையும் முளிதாக பொலிகின்ற திருநோக்கு எவருடைய கடைகண்ணின் கருணை நோக்கு அந்த கருணை நோக்கு முரஹரியின் மனம் வாழும் திருமகளே உனது நோக்கு உன்னை ஏன் மனதாலும் மெய்யாலும் சொல்லலும் துதிசெய்து புகழ்கிறேன் நான்

பத்ம மலரில் வாழும் பத்மினி பத்மத்தை கையேந்து பதுமை நிதியே புத்தொளி வீசும் வெண்ணாடை மணமாலையுடன் ஒளிகின்ற செல்வச்சுடரே பகவதி ஹரினாதனின் பிரனனாயகியே நெஞ்சம் எல்லாம் அறிந்தோம் ஜகம் மூவிநிற்கும் பெரும் ஐஸ்வரியம் தருபவளே என்னிடம் கருணை காட்டு கனக மழை பொலிகின்ற காருணிய மேகமே இலக்சுமியே வந்தருள்கவே கனக தாரை என்னும் துதி கேட்டு வாழ்விலே அயிஸ்வரியம் தந்தருள்கவே!

தேவகங்கை நதியின் தூய நல்நீரினை பொற்குடத்தில் திசைகளில் மத யானைகள் ஏந்தி நீர்ராற்று திகழ்கின்ற தெய்வ அழகே தாவும் அலைகடல் அரசன் பெற்ற பெண்னே உலகம் யாவிற்குமே அன்னையே தரனிகளின் தலைவனாம் திருமாலின் மனைவியே காலையுனை துதிசெய்கிறேன் அரவிந்த மலர்போன்ற அழகிய கண்ணனின் ஆனந்த காதலி நீ ஐஸ்வரியம் இல்லாமல் ஏழ்மையில் புலல்வதில் முதல்வனாய் நிற்பவன் நான் அருள்வெள்ளம் மலை மோதும் உன்கடை கண்களில் பார்வைக்கு

ஏங்கிநிற்கும் அடியனை உந்தயயை உண்மையாய் தேடிடும் என்னை நீ காண வேண்டும் கனக மழை பொலிகின்ற காருணிய மேகமே
இலக்சுமியே வந்தருள்கவே கனக தாரை என்னும் துதி கேட்டு வாழ்விலே
அயிஸ்வரியம் தந்தருள்கவே மூன்று வடிவங்களின் உருவமாய் நிற்பவள்
மூவுலகினிற்கும் தாயாம் மோகன இலச்சுமியை

மேல்சொன்னை துதிகளால் நிதம் புகழும் மனிதர் எவரும்
சான்றோர்கள் போற்றிடும் அறிவாளி ஆகிறான்
செல்வம்மெல்லாம் பெறுகிறான்
ஜெகமிதில் மேம்பட்ட குணமெல்லாம் கைவர
பாக்கியம் பல பெறுகிறார்
செல்வமெலாம் பெறுகிறார்
பாக்கியம் பல பெறுகிறார்
செல்வமெலாம் பெறுகிறார்

Leave a Reply